×

நக்கீரன் கோபாலை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு : தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது

சென்னை : நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை சிந்தாதிரிபேட்டையில் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடைபெற்று வரும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வைகோ சென்றார். அங்கிருந்த போலீஸார் அவரை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்க வலியுறுத்தி வைகோ சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல்துறையினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வைகோ தர்ணாவை கைவிட மறுத்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனதர். முன்னதாக நக்கீரன் கோபாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்று கூறிய வைகோ, காவல்துறையை இழிவுபடுத்திய நபரை ஆளுநர் மாளிகைக்கு அமைத்து விருந்து ஆளுநர் பன்வாரிலால் வைக்கிறார்  என்றும் நெருக்கடி நிலையை போல விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர் என்றும் வைகோ சாடினார். மேலும் சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்ததாகவும், ஆனால் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தர மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்றும் வைகோ கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nakheeran Gopalan ,Waiko , Nakheeran Gopal, arrested, Vaiko, Dharna,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!